பாரதி கல்லுாரியில் விளையாட்டு விழா 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது.

கல்வி நிறுவனங்களின் தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். பொருளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுபா வரவேற்றார்.

விழாவில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, உடற்கல்வியின் முக்கியத்துவம், பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம் குறித்து பேசினார்.

தொடர்ந்து கல்லுாரி மாணவியருக்கு கோ-கோ, வாலிபால், எறிபந்து, கபடி, இறகுப்பந்து, செஸ் உள்ளிட்ட பல்வேறு வகை குழு மற்றும் தனித்திறன் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட ஆசிரியர்கள் நடத்தினர். விழாவில் வடக்கனந்தல் பாரதி பள்ளி தாளாளர் ரஞ்சிதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆங்கில துறை பேராசிரியர் ஆர்த்தி நன்றி கூறினார்.

Advertisement