4.5 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்
திருப்பூர்; பீஹார் மாநிலம், பாட்னாவில் இருந்து, கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு ரயிலில் சிலர் கஞ்சா கடத்தி வருவதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருப்பூர் ரயில்வே போலீசார் ஈரோட்டில் இருந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கண்காணித்து வந்தனர். முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகப்படும் விதமாக இருந்த வடமாநில பயணி, இருவரிடம் சோதனை செய்து விசாரித்தனர்.
பீஹாரை சேர்ந்த ஜவஹர் கோப், 38, சுஜீத்குமார், 23 ஆகியோர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து, 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவர்களை திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெளிநாடுகளில் மேற்படிப்பு தொடர குறையும் ஆர்வம்;அமெரிக்காவை புறக்கணிக்கும் இந்திய மாணவர்கள்
-
ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுக்க என்ன காரணம்; 30 ஆண்டுகள் கழித்து மனம் திறந்த ரஜினி
-
நீட் எதிர்ப்பு என்பது முதல்வரின் சுயநல நாடகம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
Advertisement
Advertisement