அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தல்; சிறையில் அடைக்க முடிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் இருந்து பயங்கரவாதி தஹாவூர் ராணா நாடு கடத்தப்பட்டான். அவன் இன்று அல்லது நாளை அதிகாலை தஹாவூர் ராணா இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவான் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2008ல் நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் லஷ்கர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா. நம் அண்டை நாடான பாகிஸ்தானை பூர்வீகமாக உடைய இவன், அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டான்.
அவன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறான். நாடு கடத்தக் கூடாது என்ற அவனது கோரிக்கையை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தள்ளுபடி செய்து விட்டது. நாடு கடத்தவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் நாடு கடத்த தேவையான உத்தரவுகளை பிறப்பித்து விட்டார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அவர் இன்று அல்லது நாளை அதிகாலை இந்தியா அழைத்து வரப்படுவார் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்தியா வந்தவுடன் தஹாவூர் ராணா என்.ஐ.ஏ., அதிகாரிகள் கட்டுப்பாட்டில் ஒரு வாரம் இருப்பான். பின்னர் டில்லி மற்றும் மும்பையில் உள்ள சிறைகளில், ஏதாவது ஒரு இடத்தில் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்படுவான் என தெரிகிறது.












மேலும்
-
துணை பயிற்சியாளர் அபிஷேக் நீக்கம் ஏன்... * இந்திய அணியில் புது குழப்பம்
-
மும்பை அணி கலக்கல் * வில் ஜாக்ஸ் அபாரம்
-
உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன் : காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்
-
பிரீமியர் லீக்: 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
-
ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் * அபிஷேக், நிதிஷ், ஹர்ஷித் ராணா வாய்ப்பு
-
செஸ்: ஹம்பி, திவ்யா அபாரம்