அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் 11 மணி நேர அமலாக்கத்துறை ரெய்டு நிறைவு!

சென்னை: சென்னையில் ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர் உள்ளிட்ட 13 இடங்களில் அமைச்சர் நேரு குடும்ப நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


நேரு மகன் வீட்டில் சோதனை
சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது. ஆழ்வார்பேட்டையில் அமைச்சர் கே.என். நேருவின் மகனும், பெரம்பலூர் தொகுதி எம்.பி.,யுமான அருணுக்கு சொந்தமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி தில்லைநகரில் அமைச்சர் நேருவின் மகன் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடந்தது.
கோவையிலும் ரெய்டு
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
என்ன காரணம்
இதில் ட்ரூடம் இ.பி.சி., என்ற நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 22 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குனராக உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாகவும், நேரு குடும்பத்தினர் நடத்தும் கட்டுமான நிறுவனங்களில் நடக்கும் பண முறைகேடுகள் தொடர்பாகவும் ரெய்டு நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக, இன்று காலை 7 மணி முதல் நடத்தப்பட்ட அமலாக்கத்துறையினரரின் ரெய்டு, 11 மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது. ஏராளமான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

















மேலும்
-
7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ., செயலி; இந்திய வம்சாவளி சிறுவனுக்கு குவியும் வாழ்த்து
-
சாய் சுதர்சன் சிறப்பான ஆட்டம்; ராஜஸ்தானுக்கு 218 ரன்கள் இலக்கு
-
தமிழகம், பீஹாரில் வெல்வோம்; அடித்து சொல்கிறார் அமித்ஷா
-
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு
-
மின்னல் தாக்குதல்: பீஹாரில் 13 பேர் உயிரிழப்பு
-
கபட நாடகக் கச்சேரிகளை நிகழ்த்தும் தி.மு.க.,: விஜய் விமர்சனம்