ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

7

ஆமதாத்பாத்: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும்'' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசினார்.


காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய நினைவிடத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பை வேண்டுமென்றே எதிர்க்கிறார்.


நாட்டின் மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கை அவர்கள் வெளியிட விரும்பவில்லை. தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் பார்லிமென்டில் பிரதமர் மோடியிடம் கேட்டு இருந்தேன்.



ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும். தெலுங்கானா என்ன செய்ததோ, அதை நாங்கள் நாடு முழுவதும் செய்யப் போகிறோம். வக்ப் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல். வக்ப் திருத்த சட்ட மசோதா கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற பிற சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement