கார்ல்சனை வென்ற அர்ஜுன் * 'பிரீஸ்டைல்' செஸ் தொடரில்

பாரிஸ்: பிரான்சின் பாரிசில் 'பிரீஸ்டைல்' கிராண்ட்ஸ்லாம் செஸ் தொடர் 2 வது சீசன் நேற்று துவங்கியது. உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, ஐந்து முறை உலக சாம்பியன் ஆன நார்வேயின் கார்ல்சன் உள்பட 12 பேர் பங்கேற்கின்றனர்.
முதலில் 'ரவுண்டு ராபின்' முறையில் போட்டி நடக்கிறது. ஒவ்வொரு வீரரும், மற்ற வீரருடன் தலா ஒரு முறை மோதுவர். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-8' இடம் பிடிக்கும் வீரர்கள் 'நாக் அவுட்' (காலிறுதி) போட்டிக்கு முன்னேறுவர். நேற்று 6 சுற்று நடந்தன.
முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் காருணாவை வென்றார். அடுத்த சுற்றில் அர்ஜுன், கார்ல்சனை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 29 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
நான்கு சுற்று முடிவில் இந்திய வீரர்கள் அர்ஜுன் (2.0), பிரக்ஞானந்தா (2.0), குகேஷ் (1.5) 6, 7, 8வது இடத்தில் இருந்தனர். உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (3.5), கார்ல்சன் (3.0), பிரான்சின் மேக்சிம் வாசியர் (3.0) 'டாப்-3' ஆக உள்ளனர்.
மேலும்
-
கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்
-
ஷ்ரேயஸ் பெயர் பரிந்துரை * ஐ.சி.சி., விருதிற்கு...
-
கேப்டன் ஹர்மன்பிரீத் * இந்திய பெண்கள் அணி அறிவிப்பு
-
துப்பாக்கிசுடுதல்: ஷ்ருச்சி அபாரம்
-
பாதசாரிகள் மீது கார் மோதியதில் 6 பேருக்கு காயம் : டில்லியில் மாணவர்கள் போராட்டம்
-
திரிணமுல் எம்.பி.,க்கள் கோஷ்டிச்சண்டை; கதறி அழுத மஹ்வா மொய்த்ரா!