கூடைப்பந்து: தமிழகம் சாம்பியன்

சென்னை: சென்னையில் தெற்காசிய கூடைப்பந்து சங்கம் ('சாபா') சார்பில் முதன் முறையாக கிளப் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது.
இந்தியா சார்பில் தமிழகம், இலங்கையின் கொழும்பு, நேபாளின் டைம்ஸ் கிளப், பூடானின் திம்பு கிங்ஸ், மாலத்தீவின் டி-ரெக்ஸ் என 5 அணிகள் பங்கேற்றன.
தமிழக அணி முதல் போட்டியில் பூடானின் திம்புவை (107-41) வென்றது. அடுத்து கொழும்பு (110-54), டைம்ஸ் (118-44) அணிகளை வீழ்த்தியது. கடைசியாக 106-49 என டி-ரெக்ஸ் அணியை வென்றது. பங்கேற்ற 4 போட்டியிலும் வெற்றி பெற்ற தமிழக அணி, முதலிடம் பிடித்து தெற்காசிய கூடைப்பந்து கிளப் தொடரில் சாம்பியன் ஆனது. தவிர மேற்கு ஆசிய சூப்பர் லீக் தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றது.

Advertisement