காற்றில் சாய்ந்த கேமரா சீரமைக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்: விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கனமழை, பலத்த காற்றில் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே சென்டர் மீடியனில் அமைக்கப்பட்ட கேமரா சரிந்துள்ளது.

விருதுநகரில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. பலத்த சூறைக்காற்று வீசியதால் மின்தடை ஏற்பட்டது. நகரில் பொங்கல் விழா விமர்சையாக நடந்து வந்தது. இந்நிலையில் மேற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள சென்டர்மீடியனில் உள்ள ஒருங்கிணைந்த 3 சி.சி.டி.வி., கேமராக்கள் சரிந்துள்ளன. நாளடைவில் இது கீழே விழ வாய்ப்புள்ளது.

சாய்ந்துள்ள சி.சி.டி.வி., கம்பத்தை வலுப்படுத்த வேண்டும். கனமழை காரணமாக பழுது ஏற்பட்டுள்ளதா என பரிசோதிக்க வேண்டும். மேலும் பங்குனி பொங்கல் என்பதால் மதுரை ரோட்டில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே விரைந்து கேமராவை சரி செய்ய வேண்டும்.

Advertisement