அரை மனதோடு அமைக்கப்பட்ட கூட்டணி: திருமாவளவன் பேட்டி

25

சென்னை: ''பா.ஜ., கொடுத்த நெருக்கடியின் விளைவாக அரை மனதோடு அமைக்கப்பட்ட கூட்டணி'' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


@1brசென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அ.தி.மு.க., மீது பா.ஜ., சவாரி செய்யத்தான் கூட்டணி அமைத்திருக்கிறது. அ.தி.மு.க., தலைமையில் கூட்டணியா? பா.ஜ., தலைமையில் கூட்டணியா என்ற சந்தேகம் எழுகிறது. அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி என்றால் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தான் அறிவித்து இருக்க வேண்டும்.

பா.ஜ., கொடுத்த நெருக்கடியின் விளைவாக அரை மனதோடு தான் இந்த கூட்டணியை அவர் அமைத்திருக்க முடியும் என கருதுகிறேன். தமிழகத்தில் பா.ஜ.,வால் தனித்து நிற்க முடியாது. அவ்வாறு தனித்து நின்றால், அவர்கள் ஒரு சக்தியே இல்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தி விடுவார்கள். அ.தி.மு.க. வாக்கு வங்கியை தங்கள் வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு பா.ஜ.., யுக்தி.



சதி வலையில் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.,உடன் இணைய வாய்ப்பில்லை என பழனிசாமி நிபந்தனை விதித்து இருப்பார். பொன்முடியின் பேச்சிற்கு முதல்வர் ஸ்டாலின் தக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறார். துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக்கி இருக்கிறார். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

Advertisement