சுத்திகரித்த நீர் வெளியேற துார்வாரப்பட்ட வாய்க்கால்

திருப்பூர்; நேற்று முன்தினம் பெய்த கனமழையால், திருப்பூர் சின்னாண்டிபாளையம் பிரிவு அருகே, மாநகராட்சிக்கான பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு மையத்துக்குள் தண்ணீர் தேங்கியது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வெளியேறும் குழாய் வழியாக தண்ணீரை வெளியேற்ற முயற்சித்தனர். ஆண்டிபாளையம் குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறிக்கொண்டிருப்பதால், உபரி நீர் செல்லும் சுத்திகரிப்பு வாய்க்காலில் தண்ணீர் வெளியேற தடங்கல் ஏற்பட்டது.
பொக்லைன் இயந்திரம் மூலம், சுத்திகரிப்பு மையத்தின் தண்ணீர் வெளியேறுவதற்காக, வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டது; அதற்கு பிறகே, சுத்திகரிப்பு மையத்தில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டதாக, அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement