நீர் மோர் பந்தல் திறப்பு

திருப்பூர்; திருப்பூர் மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், 48வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி ஏற்பாட்டில் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் நேற்று காலை நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் பங்கேற்று திறந்து வைத்தார். மக்களுக்கு தர்பூசணி பழமும், நீர் மோரும் வழங்கப்பட்டது. ஐ.என்.டி.யு.சி., மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கோடை காலம் முடியும் வரை நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, கவுன்சிலர் கூறினார்.

Advertisement