ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!

புதுடில்லி: சென்னை உள்பட 25 ஐகோர்ட்டுகளில் பணியாற்றும் 769 நீதிபதிகளில் 95 பேர் மட்டுமே தங்களது சொத்துவிபரத்தை வெளியிட்டனர்.
கடந்த மார்ச் 14ம் தேதி டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உள்விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக ஏப்.,1ம் தேதி சுப்ரீம் கோர்ட் அனைத்து நீதிபதிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை நிரூபிக்கும் விதமாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்து விபரங்களை இணையதளத்தில் வெளியிட சம்மதம் தெரிவித்தனர்.
அதன்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்பட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களை வெளியிட்டு உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 25 ஐகோர்ட்டுகளில் 769 நீதிபதிகள் பணியில் உள்ளனர். இவர்களில் 95 பேர் மட்டுமே இதுவரை தங்களது சொத்துவிபரத்தை வெளியிட்டனர்.
கேரள ஐகோர்ட்டில் பணியாற்றும் 44 நீதிபதிகளில் 41 பேர் தங்களுடைய சொத்து விவரங்களை தெரிவித்தனர்.
இதபோல, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட்டில் பணியாற்றும் 54 நீதிபதிகளில் 30 பேரும், சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் 65 நீதிபதிகளில் 5 பேரும்,
டில்லி ஐகோர்ட்டில் பணியாற்றும் 38 நீதிபதிகளில் 7 பேரும், ஹிமாசல பிரதேசம் ஐகோர்ட்டில் பணியாற்றும் 12 நீதிபதிகளில் 11 பேரும்,
சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் பணியாற்றும் 16 நீதிபதிகளில் ஒருவரும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டு உள்ளனர்.











மேலும்
-
கணவர் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொன்ற மனைவி கைது
-
அ.தி.மு.க.,விடம் 84 தொகுதிகள் கேட்க வேண்டும்: அண்ணாமலை
-
மே.வங்க கலவரம் பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி மம்தா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு
-
பெண்கள் குறித்த பொன்முடி பேச்சு கண்டனத்துக்குரியது * முதல்வர் நடவடிக்கை எடுக்க கார்த்தி எம்.பி., கோரிக்கை
-
பாலியல் பலாத்காரம் வியாபாரிக்கு 20 ஆண்டு சிறை
-
மூதாட்டியை தாக்கி 4 பவுன் நகை கொள்ளை