சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்; மதபோதகரை தேடி வரும் போலீசார்

1

கோவை: கோவை, கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ், 37. கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் குடியிருந்து வருகிறார். 11 மாதங்களுக்கு முன், இவர் தனது வீட்டில் விருந்து நடத்தினார். விருந்தில் பங்கேற்ற, 14, 17 வயது சிறுமிகளுக்கு, ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமிகளிடம், இதுகுறித்து யாரிடமும் கூற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் 14 வயது சிறுமி அளித்த தகவலின்பேரில், சைல்டு லைன் அமைப்பினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள ஜான் ஜெப ராஜை தேடி வருகின்றனர்.

Advertisement