தனிஷா-துருவ் ஜோடி அபாரம் * ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில்...

நிங்போ: பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் தனிஷா - துருவ் ஜோடி வெற்றி பெற்றது.
சீனாவில் பாட்மின்டன் ஆசிய சாம்பியன்ஷிப் 42வது சீசன் நேற்று துவங்கியது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா ஜோடி, 15-21, 21-12, 21-11 என மலேசியாவின் ஹூ பங் ரான், செங் சு இன் ஜோடியை வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆஷித் சூர்யா, அம்ருதா ஜோடி, 21-9, 21-11 என இலங்கையின் துலித், பாஞ்சாலி ஜோடியை வென்றது. இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், வரியாத் ஜோடி 18-21, 19-21 என மலேசியாவின் கோ ஷி, ஷெவான் ஜோடியிடம் போராடி தோற்றது.
ஆண்கள் ஒற்றையர் தகுதிச்சுற்று முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் விஷால் வாசுதேவன், அடுத்த போட்டியில் 21-11, 11-21, 13-21 என மக்காவ் வீரர் பாங் பங் புயிடம் தோல்வியடைந்தார்.
மேலும்
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
-
பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..
-
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா