பிரதான ரோடுகளில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

உடுமலை; உடுமலை நகராட்சி பகுதிகளில், குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
உடுமலை நகராட்சியில், தளி ரோடு அரசு பள்ளி அருகிலும், பழநி ரோடு, ஐஸ்வர்யா நகர் சந்திப்பு பகுதியிலும், குழாய் உடைந்து பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.
அதே போல், தாராபுரம் ரோட்டில், பஸ் ஸ்டாப் பகுதியில், ரோட்டின் இரு புறமும், பிரதான குழாய் மற்றும் பகிர்மான குழாய் உடைந்து அதிகளவு குடிநீர் வீணாகி வருகிறது.
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் மக்களுக்கு பயன்படாமல், வீணாகி வருவதோடு, இப்பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மேலும், பிரதான போக்குவரத்து ரோடுகளில், குடிநீர் வெளியேறி, தேங்கி வருவதோடு, ரோடும், குண்டும், குழியுமாக மாறி விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
-
வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் கூடாது: உச்சநீதிமன்றம்
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
-
பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..