தனியார் நகை கடன் நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் மோசடி செய்தவர் கைது

கொருக்குப்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் சிவக்குமார், 36. இவர், தங்க நகை கடன் வழங்கும் தனியார் நிறுவனத்தில், ஏரியா மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன், பழைய வண்ணாரப்பேட்டை கிளையில் பணம் கையாடல் நடந்ததாக கிடைத்த தகவலின்படி, சிவக்குமார் அங்கு சென்று கணக்குகளை சரிபார்த்தார்.

அப்போது, அங்கு பணிபுரியும் ஊழியரான டில்லிபாபு என்பவர், அவரது அண்ணன் கணேஷ், 30, பெற்ற தங்க நகை கடனுக்காக, 1 லட்சத்து 65 ஆயிரத்து 436 ரூபாய் பணம் செலுத்தியது போல, கணினியில் வரவு வைத்து மோசடி செய்தது தெரிந்தது.

இது குறித்து, கொருக்குப்பேட்டை போலீசில் சிவக்குமார் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், மோசடி நடந்தது தெரிந்தது.

அதையடுத்து, கொருக்குப்பேட்டை, பெருமாள் கோவில் தோட்டம், இரண்டாவது தெருவை சேர்ந்த கணேஷை கைது செய்த தனிப்படை போலீசார், தலைமறைவான டில்லிபாபுவை தேடி வருகின்றனர்.

Advertisement