மூதாட்டியை தாக்கி நகை பறித்த வாலிபர் கைது

வில்லியனுார் : கரிக்கலாம்பாக்கம் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள தமிழக பகுதியான கடலுார் மாவட்டம், கீழ்குமாரமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை தாய் அழகம்மாள், 70. இவர், கடந்த 7ம் தேதி நெற்பயிர் களை எடுக்க சென்றார்.

அப்போது அவர், பாகூர் மெயின் ரோட்டில் உள்ள விவசாய நிலம் பகுதியில் மரத்தடியில் தனியாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் அழகம்மாளை தாக்கி, அவர் அணிந்திருந்த அரை கிராம் மூக்குத்தியை பறித்துக்கொண்டு பைக்கை விட்டுவிட்டு தப்பியோடினார்.

இது குறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, பைக்கை கைப்பற்றி, வாலிபரை தேடி வந்தனர். விசாரணையில், குருவிநத்தம் கிராமத்தை சேர்ந்த துளசிங்கம் மகன் தனுஷ், 25, நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

அதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement