கிராமப்புறங்களில் மினி பஸ்கள் இயக்கத்திற்கு ஆர்வமில்லை; ஷேர் ஆட்டோ, டூவீலர் அதிகரிப்பால் அச்சம்

தமிழகம் முழுவதும் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு அறிவித்தது. திண்டுக்கல் வட்டாரத்தில் 33, பழநி 12 என 45 வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

கடைசி தேதி பிப். 24 ஆக இருந்தது. மினி பஸ்கள் இயக்க போதுமான வரவேற்பு இல்லாததால் கடைசி தேதி மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதற்கு காரணம் பஸ்வசதி இல்லாத கிராமங்கள் குறித்து கணக்கெடுத்தபோது மக்களின் கருத்துக்களை அறியவில்லை. கிராமப்புறங்களில் பஸ்கள் சென்றடையாத கிராமமக்கள் உள்ள பகுதிகளை முழுமையாக கண்டறியவில்லை. பல வழித்தடங்களில் பெரும்பான்மையான துாரங்களில் ஏற்கனவே பஸ்கள் இயக்கப்படுவதும் ஒரு காரணம். ஷேர் ஆட்டோ ஆதிக்கம் அதிகமாகிவிட்டதால் மினி பஸ் இயக்கினால் நஷ்டம் தான் அடைய வேண்டும் என பல காரணங்களை தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழித்தடத்தில் புதிதாக மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

Advertisement