மாணவர்களுக்கு உதவி

ஆத்துார்: செம்பட்டி பசுமை குறள் அமைப்பின் சார்பில் வீரக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியை ரேவதி தலைமை வகித்தார். ஆசிரியை லுாயிஸ் கரோலின் மேரி வரவேற்றார். புரவலர்கள் ராஜேந்திரன், அருளானந்தம் முன்னிலை வகித்தனர். மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தன்னார்வலர்கள் கிருஷ்ணபாண்டி, பரத், ராமன் பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமு செய்தார். ஆசிரியர்கள் சகாயலீலா, சிசிலியா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கமலா பங்கேற்றனர்.

Advertisement