அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : தேர்தல் கால வாக்குறுதிப்படி பி.பி.பி., சி.ஓ.இ., திட்ட தொகுப்பூதிய பயிற்றுனர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தின் சார்பில் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்நடந்தது.

மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் காந்திராஜ், இன்பராஜ், பூசாரி கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி பேசினார். நிர்வாகி ஆண்டவர் நன்றி கூறினார்.

Advertisement