பராமரிப்பு இல்லாத நீர்நிலைகளால் கோடையில் மழை பெயதும் தண்ணீர் வீணாகுது

விருதுநகர் மாவட்டம் வணிகத்திற்கு புகழ் பெற்றுள்ளது போல, இதற்கு நிகராக விவசாயமும் பாரம்பரியமாக செய்யப்படுகிறது. இங்கு குண்டாறு, வைப்பாறு உள்ளிட்ட பெரிய ஆறுகளும், துணை நதிகளான கிருதுமால், அர்ச்சுனா, கெளசிகா உள்ளிட்டவைகளும் உள்ளன. குல்லூர்சந்தை, இருக்கன்குடி, பிளவக்கல், ஆனை குட்டம் உள்ளிட்ட 9 அணைகள் உள்ளன. பொது பணித்துறை கட்டுபாட்டில் 400 க்கு மேற்பட்ட கண்மாய்களும், 700க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், நகராட்சி கண்மாய்கள் உள்ளன. இது தவிர, ஆறுகள், ஊருணிகள், தெப்பங்கள் உள்ளன. மாவட்டத்தில் 3 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது.
மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களுக்கு இணையாக விருதுநகர் மாவட்டத்தில் மாவட்டத்தில் விவசாய நிலங்களும், இவற்றில் விவசாயமும் செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றம், கால சூழ்நிலையால் மழை பொழிவும் பருவம் தவறி பெய்கிறது. பெய்கிற பழையும் கனமழையாக தொடர்ந்து பெய்கிறது.
முன்பு, விருதுநகர் மாவட்டத்தில் மழை காலத்தில் கூட, ஒரு சில நாட்கள் தான் மிதமான மழை பெய்யும். ஆனால், கால சூழ்நிலையில் கோடை காலத்தில் கூட கனமழை பெய்கிறது. இருப்பினும், மாவட்டத்தில் பல நீர்நிலைகள் முறையான பராமரிப்பு இன்றி போனதால், பெய்கிற மழையை தேக்க முடியவில்லை. கண்மாய்களிலும் கரைகளை பலப்படுத்துதல், ஷட்டர்கள் பழுது நீக்குதல், துார் வாறுதல், மழைநீர் ஒடைகளை சரி செய்தல் என எதுவும் தரமானதாக செய்யப்படவில்லை. செய்கிற பணிகளையும் கடமைக்கு செய்கின்றனர். இதனால், மழை பெய்தாலும் கண்மாய்கள் நிறைவது இல்லை. தேங்குகிற தண்ணீரும் வெளியேறி விடுகிறது. தேவையான தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் தங்கள் விவசாயத்தை குறைத்து கொண்டே வருகின்றனர்.
தற்போது பெய்கின்ற தொடர் கனமழையால் ஒரே நாளில் கண்மாய்கள் நிறைந்து விடும் அளவிற்கு பெய்கிறது. இதை கருத்தில் கொண்டு பெரிய கண்மாய்களை துார் வாரி, கரைகளை பலப்படுத்தியும், கண்மாய்களை ஆழப்படுத்தவும் வேண்டும்.
விவசாய சங்க மாவட்ட தலைவர் ராம்பாண்டியன்: விருதுநகர் மாவட்டத்தில் நில அமைப்பு பெரும்பகுதி மானாவாரி நிலமும், கண்மாய்கள் பாசன வசதி பெறும் நிலங்களாக மாறி மாறி இருக்கும். பல ஆண்டுகளாக கண்மாய்கள் துார்வாரப்படாமலும், ஆழப்படுத்தாலும், கரைகள் பலமிழந்தும் உள்ளன. நீர்பாசன துறை அலட்சியமாக உள்ளது. தற்போது உள்ள பருவநிலை மாற்றத்தால் கனமழை தொடர்ந்து பெய்து ஒரே நாளில் கண்மாய்கள் நிறைந்து விடும் நிலை உள்ளது. ஆனால், கன மழையை தாங்க கூடிய பலம் கண்மாய்களுக்கு இல்லை. இனிவரும் காலங்களிலாவது சுதாரித்து நீர்நிலைகளை பாதுகாத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்.
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை