கதம்ப வண்டுகள் அழிப்பு

திருச்சுழி : திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் இருந்த கதம்ப வண்டுகளை தீயணைப்பு துறையினர் அழித்தனர்.

திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுபாட்டு அறை உள்ளது. இந்த அறை பூட்டியே கிடப்பதால் கதம்ப வண்டுகள் கூடி கட்டி இருந்தது. அடிக்கடி ஊழியர்களை கடித்தது. இதையடுத்து தீ யணைப்பு துறை நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வீரர்கள் அறையில் புகுந்து விஷ வண்டுகளை அழித்தனர்.

Advertisement