பெரியகுளத்தில் நாளை பங்குனி உத்திரத் தேரோட்டம்

பெரியகுளம் : பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா ஏப். 2ல் கொடியேற்றத்துடன் துவங்கி, பத்து நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்து வருகிறது. நாளை 9ம் நாள் திருவிழாவான தேரோட்டம் மாலை 4:30 மணிக்கு நடக்கிறது. தேர் செல்லும் ரோடான வி.நி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே சிறுபாலம் அமைக்கும் பணி முடிவடைந்தும், ரோட்டின் இரு புறங்களிலும் மண் அகற்றப்பட்டு, தேர் செல்வதற்கு ரோடு தயார் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
6-ம் நாள் மண்டகப்படியாக துரைராமசிதம்பரம், அமராவதி அம்மாள், சிதம்பர சூரியநாராயணன் குடும்ப மண்டகப்படி நடந்தது.
பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, விநாயகர், சண்டிகேஸ்வரர், திருஞானசம்பந்தர் மண்டகப்படியில் எழுந்தருளினர். சிறப்பு பூஜை நடந்தது.
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை