'எக்ஸ்ரே' எடுத்த நோயாளிகள் பரிந்துரை பெற முடியாமல் தவிப்பு
கம்பம் : அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.டி., படித்த டாக்டர்கள் இல்லாததால் -
எக்ஸ்ரே எடுத்த சர்க்கரை நோயாளிகள் யாரிடம் பரிந்துரை பெறுவது என தெரியாமல் திணறி வருகின்றனர்.
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்கு வரும் சர்க்கரை நோயாளிகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், முடக்கு வாதம் பாதிப்பு, கேன்சர் நோயாளிகள் ஆகியோரை எக்ஸ் ரே எடுக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இந்த நோயாளிகளுக்கு எளிதாக காசநோய் பரவும் வாய்ப்பு உள்ளதால் எக்ஸ்ரே எடுத்து உறுதி செய்ய கூறப்பட்டுள்ளது. எனவே,100 நாட்களுக்குள் எக்ஸ்ரே எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம் கனிசமான எண்ணிக்கையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், எக்ஸ்ரே எடுத்தவர்களுக்கு காசநோய் பாதிப்பு உள்ளதா என்பதை எம்.டி. டாக்டர்கள் தான் உறுதி செய்ய வேண்டும். கம்பம் பகுதியில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் எம்.டி. டாக்டர்கள் பணியில் இல்லை. உத்தமபாளையம் மருத்துவமனையில் கடந்த வாரம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் எக்ஸ் ரே எடுத்தவர்களின் எக்ஸ் ரே பிலிமை பார்த்து பரிந்துரை செய்ய டாக்டர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை