கல்லுாரி மாணவி மாயம்

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே வாய்க்கால்பாறையைச் சேர்ந்தவர் கணேசன் 52, இவரது மகள் மெர்ஸி சுகன்யா 23, தேனியில் தனியார் கல்லூரியில் படித்தார்.

ஆதார் கார்டு புதுப்பிப்பதற்காக செல்வதாக கூறி கல்லுாரிக்கு விடுமுறை எடுத்துள்ளார். ஏப்ரல் 4 ல் காமாட்சிபுரம் வங்கிக்கு சென்று ஆதார் கார்டு புதுப்பித்துள்ளார். மறுநாள் ஏப்ரல் 5 முதல் மெர்ஸி சுகன்யாவை காணவில்லை. அவர் எங்கு சென்றார் என கண்டு பிடிக்க முடியவில்லை.

தேனி பஸ்சில் சென்றதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தந்தை புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement