எத்தனால் இறக்குமதிக்கு தடை: இந்தியா மீது அமெரிக்கா புகார்

வாஷிங்டன்: எத்தனாலை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்திருப்பதால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக, அந்நாட்டு வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அமைப்பு, 2025ம் ஆண்டுக்கான தேசிய வர்த்தக மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முக்கிய வர்த்தக கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன் ஆகியவை நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், இவை அமெரிக்காவின் வர்த்தகத்தை சிதைப்பதுடன், அமெரிக்க உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அதில் குற்றம்சாட்டி உள்ளது.
மேலும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எரிபொருளுடன் எத்தனால் கலப்பை அடைய இலக்கு நிர்ணயித்துள்ள போதும், எரிபொருள் பயன்பாடுக்கான எத்தனால் இறக்குமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. தாய்லாந்தும் இதே போன்ற காரணங்களுக்காக, கடந்த 2005 முதல் இறக்குமதி உரிமத்துக்கு அனுமதி அளிப்பதில்லை.
இந்தியா மற்றும் தாய்லாந்து சந்தைகள் அமெரிக்க எத்தனாலை அனுமதித்தால், ஆண்டுக்கு 3,519 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி மதிப்பு அதிகரிக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.



மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை