மாணவியை ஏமாற்றி செயின் பெற்ற வேன் டிரைவர் மீது வழக்கு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த பெண்ணின் 14 வயது மகள் ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.

இவர் கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி வேனில் சென்று வந்துள்ளார். மார்ச் 24 ல் மகளின் கழுத்தில் அவரது தாயார் 2 பவுன் செயினை அணிவித்து பள்ளிக்கு அனுப்பினார். மார்ச் 28 ல் செயினை காணவில்லை என மகளிடம் தாயார் கேட்டுள்ளார். அப்போது செயினை வேன் டிரைவர் பாண்டியிடம் கொடுத்ததாக கூறினார். இது குறித்து பள்ளி நிர்வாகம் மூலம் பாண்டி குடும்பத்தினரிடம் நகையை கேட்டதற்கு திருப்பி தரவில்லை. இது குறித்து மாணவியின் தயார் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் வேன் டிரைவர் பாண்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement