குறுகிய சாலையால் விபத்து அபாயம்

நடுவீரப்பட்டில் இருந்து சி.என்.பாளையம், பட்டீஸ்வரம், நெல்லித்தோப்பு, சாத்திப்பட்டு வழியாக பண்ருட்டி செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பண்ருட்டிக்கு அன்றாட தேவைக்காக சென்று வருகின்றனர்.
சி.என்.பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் இந்த வழியாக தான் பள்ளிக்கு செல்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளையும் கரும்புகளை, நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலைக்கு இந்த சாலை வழியாக தான் விவசாயிகள் டிராக்டரில் ஏற்றி செல்கின்றனர்.
சாலை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த 3.5 மீட்டர் அகலத்திலேயே உள்ளது. சாலையின் இருபுறமும் பல இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்க முடியாத நிலை உள்ளது. மேலும், சாலையின் பக்கவாட்டு பகுதி பள்ளமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. எனவே, சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
தந்தை சடலம் முன் திருமணம் செய்த மகன்: கண்ணீர் மல்கிய உறவினர்கள்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை