அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி: பாதுகாப்பாக இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்

5

வாஷிங்டன்; அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்,



இதுபற்றிய விவரம் வருமாறு:


விர்ஜினியாவுக்கு தென்மேற்கே சுமார் 65 மைல் தொலைவில் உள்ள ஸ்பாட்சில்வேனியா கவுண்டியில் உள்ள ஒரு வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.


அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை.


பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. துப்பாக்கியால் சுட்டவர் யார் என்பது பற்றிய தகவல்களும் வெளியாகவில்லை. இருப்பினும் அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement