ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் * அபிஷேக், நிதிஷ், ஹர்ஷித் ராணா வாய்ப்பு

புதுடில்லி: பி.சி.சி.ஐ., சம்பள ஒப்பந்த பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. அபிஷேக் சர்மா, நிதிஷ் உள்ளிட்ட இளம் வீரர்கள் இடம் பெறலாம்.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் வீரர்களுக்கான சம்பள ஒப்பந்த பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 டெஸ்ட் அல்லது 8 ஒருநாள் அல்லது 10 சர்வதேச 'டி-20' ல் விளையாடியவர்கள் தானாக இப்பட்டியலில் இடம் பெறுவர்.
இளம் வீரர் அபிஷேக் சர்மா (17 'டி-20'), 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று, 4 டெஸ்டில் பங்கேற்ற 'ஆல் ரவுண்டர்' நிதிஷ் குமார், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி (4 ஒருநாள், 18 'டி-20') புதிய பட்டியலில் சேர்க்கப்படலாம்.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 1 'டி-20' ல் பங்கேற்றுள்ளார். பி.சி.சி.ஐ., விதி இதில் பொருந்தாது என்றாலும், ஒட்டுமொத்தமாக 8 சர்வதேச போட்டியில் பங்கேற்றதால், ஹர்ஷித்துக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தவிர, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற பி.சி.சி.ஐ., உத்தரவை பின்பற்றாத ஷ்ரேயஸ், கடந்த ஆண்டு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் குவித்த ஷ்ரேயஸ், இந்திய அணி கோப்பை வெல்ல உதவியாக இருந்தார். இவர் மீண்டும் சம்பள ஒப்பந்தத்தில் இடம் பெறலாம். 'சீனியர்கள்' ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா, ஏ+ பிரிவில் தொடர உள்ளனர்.
மேலும்
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!
-
சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!
-
கர்நாடகாவில் பிரபல தாதா மகன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை