வியட்நாம் பெண்ணை மணம் முடித்த திருநெல்வேலி இளைஞர்!

3

திருநெல்வேலி: திருநெல்வேலி மாப்பிள்ளைக்கும், வியட்நாம் பெண்ணுக்கும் நெல்லையப்பர் கோவிலில் தமிழர் முறைப்படி திருமணம் நடந்தது.


திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த சுப்பிரமணியன், வாசுகி தம்பதியரின் மகன் மகேஷ். இவர் பி.பி.ஏ., முடித்து, வியட்நாமில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் குளோபல் மேனேஜராக 4 வருடங்கள் பணிபுரிந்து உள்ளார். தற்போது இரண்டு வருடங்களாக ஹாங்காங்கில் பணிபுரிகிறார்.


வியட்நாமில் பணி புரியும்போது உடன் பணிபுரியும் தோழி நுகின்லீதய் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.இதை தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் திருநெல்வேலியில் இன்று திருமணம் தமிழ் கலாச்சார முறைப்படி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மணமகளின் தரப்பில் அவரது தாயார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.



மணமகனான மகேஷின் சகோதரி பிரியாவின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு கலந்து கொள்ள வியட்நாமிலிருந்து மகேஷின் காதலி நுகின்லீதய் வந்துள்ளார். தமிழ் கலாச்சார முறை பிடித்துப் போனதால், இன்று திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றது.

Advertisement