மத போதகர் ஜான் ஜெபராஜ் மனைவியின் சகோதரர் கைது
கோவை:போக்சோ வழக்கில் கைதான ஜான் ஜெபராஜின், முன்னாள் மனைவியின் சகோதரரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிறிஸ்துவ பாடல்கள் எழுதி, இசையமைத்து, பாடி பிரபலமானவர் மத போதகர் ஜான் ஜெபராஜ், 35. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இவர், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, கோவையில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு தன் வீட்டில் நடந்த, ஒரு நிகழ்ச்சியில் சிறுமியர் இருவருக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக, கோவை மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மூணாறில் தலைமறைவாக இருந்த ஜான் ஜெபராஜை, ஏப்., 13ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, ஜான் ஜெபராஜின் முன்னாள் மனைவியின் சகோதரர் பென்னட் ஹாரிஸ், 32, என்பவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக, வாக்குமூலம் அளித்தார். போலீசார் அவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்