இது இரண்டாவது மிகப் பெரிய தவறு: ரஷ்யா மீது ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

8


கீவ்: ''சீனாவை உக்ரைன் போரில் ரஷ்யா இழுத்தது இரண்டாவது மிகப்பெரிய தவறு'' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.


உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா, அந்நாட்டின் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்ய ராணுவம் சார்பில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.


ரஷ்யா வட கொரியாவை சேர்ந்தவர்களை வைத்து உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என அண்மையில் ஜெலன்ஸ்கி புகார் கூறியிருந்தார். சில தினங்களுக்கு முன் ரஷ்யா ராணுவத்துக்காக போரிட்ட சீனர்கள் இருவரை உக்ரைன் ராணுவம் கைது செய்தது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது:



இது ரஷ்யாவின் இரண்டாவது தவறு. முதலாவது வட கொரியா. இப்பொழுது சீனாவை இந்த போருக்கு இழுக்கிறார்கள். இது ரஷ்யாவின் இரண்டாவது தவறு. உக்ரைன் மக்களுக்கு எதிராக போராடும் வெளிநாட்டினர் 150 பேர் பெயர்கள் மற்றும் பாஸ்போர்ட் விபரங்கள் சேகரித்து உள்ளோம், என்றார்.


அதேநேரத்தில் சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான், ''ரஷ்யா உடன் இணைந்து போரில் சீனர்கள் ஈடுபட்டதாக, ஜெலன்ஸ்கி கூறுவது ஆதாரமற்றது'' என மறுப்பு தெரிவித்தார்.

Advertisement