தொடர்ந்து உயரும் தங்கம் விலை; ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை நெருங்கியது!

3


சென்னை: சென்னையில் இன்று (ஏப்ரல் 18) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.


அமெரிக்கா - சீனா இடையில் நிலவும் வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இதனால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் அதன் விலை புதிய உச்சத்தை எட்டி வருகிறது.


தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஏப்ரல் 16) ஆபரண தங்கம் கிராம் 8,815 ரூபாய்க்கும், சவரன் 70,520 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (ஏப்ரல் 17) தங்கம் விலை கிராமுக்கு 105 ரூபாய் உயர்ந்து, 8,920 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 840 ரூபாய் அதிகரித்து, 71,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 18) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,945க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்தை நெருங்கி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement