மருதமலையில் வெள்ளிவேல் திருடியவர் கைது

18

கோவை: மருதமலை கோவில் அடிவாரத்தில் கும்பாபிஷேக விழாவின் போது, வெள்ளி வேல் திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்.


கோவை மருதமலையில் சுப்பிரமணி சாமி கோவில் உள்ளது. இமருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான வேல் கோட்டம் தியான மண்டபம் உள்ளது. இதில் முருகனை வேல் ரூபத்தில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் மூலவருக்கு முன்பாக சுமார் 2 1/2 அடி வெள்ளியால் செய்யப்பட்ட, 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் உள்ளது.


இந்த வெள்ளிவேல் திருடு போனது. சாமியார் வேடத்தில், சென்ற நபர் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்லும் சி.சி.டி.வி., காட்சி வெளியானது. வெள்ளிவேலை திருடி சென்ற நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 10) வெள்ளி வேல் திருடிய சாமியார் வெங்கடேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்.

Advertisement