ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இந்தியா நிரந்தர உறுப்பினராக முழு ஆதரவு ஆதரவு; ஸ்லோவாக்கியா அதிபர்

1

பிராட்டிஸ்லாவா: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு முழு ஆதரவு அளிப்பதாக ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லேக்ரினி தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக போர்ச்சுக்கல் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, அடுத்ததாக ஸ்லோவேக்கியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அதிபர் பீட்டர் பெல்லேக்ரினியை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.

அப்போது, இந்திய தத்துவ இலக்கியங்களின் ஸ்லோவாக்கியா மொழிபெயர்ப்பு அடங்கிய புத்தகங்களை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும் இந்தியா - ஸ்லோவாக்கியா உறவுகள் குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும், இரு நாடுகளிடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய ஸ்லோவேக்கிய அதிபர் பீட்டர் பெல்லேக்ரினி, "ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய நிரந்தர உறுப்பினராக ஆவதற்கு ஸ்லோவேக்கியா முழு ஆதரவை அளிக்கும் என்பதை இங்கு உறுதியளிக்கிறேன்," எனக் கூறினார்.

Advertisement