அறிவியல் துளிகள்

1. ஆஸ்திரேலியாவின், அடிலெய்ட் பல்கலை விஞ்ஞானிகள், குறைந்த ஒளியில் கருப்பையில் கரு உருவாகும் தருணங்களை நேரடியாகப் படம்பிடிக்க, குவாண்டம்-நிலை கேமராக்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த கேமிராவால், மென்மையான, உயிருள்ள செல்களுக்கு சேதாரமின்றி படமெடுக்க முடிகிறது.
Latest Tamil News
2. சிங்கப்பூர் விஞ்ஞானிகள், பூஞ்சைகள் மற்றும் மூங்கில் கழிவுகளிலிருந்து குளிரூட்டும் சுவர் ஓடுகளை (Tiles) உருவாக்கியுள்ளனர். இந்த ஓட்டின் வடிவமைப்புக்கு யானையின் தோல் அமைப்பும் உந்துதலாக இருக்கிறது. ஓட்டின் மேடுபள்ளமான அமைப்பு, சூடாகும் வேகத்தை குறைத்து, குளிர்சியடைவதை விரைவு படுத்துகிறது.
Latest Tamil News
3. ஒரு குந்துமணி அரிசியை விட சின்னதாக இருக்கும், பேஸ்மேக்கரை, அமெரிக்க நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உடலுக்குள் செலுத்தக்கூடிய இந்தக் கருவி, அதன் வேலை முடிந்ததும் கரைந்து, மறைந்துவிடும். இது இயங்குவதற்கு, நெஞ்சின் மீது அணியும் இன்னொரு கருவியிலிருந்து செலுத்தப்படும் ஒளி மட்டுமே போதும். இதயக் கோளாறுடன் பிறந்த குழந்தைகளுக்கு இந்த கருவி உயிர்காக்கும் சாதனமாகும்.
Latest Tamil News
4. நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளும்போது ஏற்படும் ஒரு முக்கியமான பிரச்னை நிலவில் இருக்கும் தூசு. நிலவில் தரையிறங்கும் விண்கலன்கள் மீது இந்த தூசுகள் ஒட்டிக் கொண்டு அவற்றைப் பழுதாக்குகின்றன. அமெரிக்காவின் நாசா தூசுகளை நீக்கும் ஈடிஎஸ் தொழில்நுட்பத்தை வடிவமைத்து அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தி இருக்கிறது.
Latest Tamil News
5. பூமியைப் போலவே பாறைகளாலான 4 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை பூமியிலிருந்து 6 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. இவை பூமியை விட அளவில் சிறியவை.

Advertisement