மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு

தியாகதுருகம்: தியாகதுருகம் மவுண்ட் பார்க் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 சேர்க்கையில் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை பெறுவதற்கான 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு நேற்று நடந்தது.
மவுண்ட்பார்க் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் தகுதி அடிப்படையில் பிளஸ் 1 சேர்க்கையில், 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இதற்கான தகுதி தேர்வு நேற்று நடந்தது. தாளாளர் மணிமாறன் தலைமையில் முதல்வர் கலைச்செல்வி, துணை முதல்வர் முத்துக்குமரன் முன்னிலையில் தேர்வு நடத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்களை சேர்ந்த, 1050 மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
தகுதிதேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் மதிப்பெண் அனுப்பப்படும்.
தகுதித் தேர்வு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி கட்டண சலுகை வழங்கப்பட உள்ளது.
மேலும்
-
உயிருக்கு போராடிய சிறுவன்; நொடியில் காப்பாற்றிய இளைஞருக்கு குவிகிறது பாராட்டு
-
முதல் இடத்தை தக்க வைக்குமா டில்லி? குஜராத்துக்கு எதிராக பேட்டிங்
-
கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்: விஜய் அறிவுரை
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!