அமெரிக்க ஏ.டி.எப்., தலைமைப் பொறுப்பில் இருந்து காஷ் படேல் திடீர் நீக்கம்

வாஷிங்டன்: ஏ.டி.எப்., அமைப்பு செயல் தலைவராக இருந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை, அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்து அந்நாட்டு நீதித்துறை உத்தரவை பிறப்பித்துள்ளது.
உலகில் செயல்படும் உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானது அமெரிக்காவின் எப்.பி.ஐ., அமைப்பாகும். இந்த அமைப்பு எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்கும் வேலையை செய்கிறது. போர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செய்வது தான் இந்த அமைப்புக்கு முழு நேர வேலையாக தரப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட எப்.பி.ஐ.,யின் இயக்குனராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை நியமித்து டிரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அமெரிக்க நீதித்துறையின் ஒரு அமைப்பான ஏ.டி.எப்., எனப்படும் மது, புகையிலை, துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களின் பணியகத்தின் இயக்குநராக கடந்த பிப்ரவரி 24ம் தேதி காஷ் படேல் பொறுப்பேற்றார். இந்தப் பொறுப்பை ஏற்ற 3 தினங்களுக்குப் பிறகு அவரை எப்.பி.ஐ., இயக்குநராக டிரம்ப் நியமனம் செய்து உத்தரவிட்டார். இதனால், ஒரே சமயத்தில் இரு அமைப்புகளின் தலைமைப் பொறுப்பையும் கவனித்து வந்தார். அமெரிக்காவில் ஒருவர் ஒரே சமயத்தில் இரு அமைப்புகளின் தலைமை பொறுப்பில் இருந்து மிகவும் அரிதான செயல் ஆகும்.
இந்த நிலையில், ஏ.டி.எப்., செயல் இயக்குநர் பொறுப்பில் இருந்து காஷ் படேல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ராணுவ செயலாளர் டேனியல் டிரிஸ்கோல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீதித்துறையின் தலைமையை மாற்றுவது தொடர்பான ஆலோசனை நடந்து வரும் நிலையில், காஷ் படேல் விடுவிக்கப்பட்டுள்ளார். பணி செயல்பாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறிய நீதித்துறை, எதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விபரத்தை வெளியிடவில்லை.
டிரம்பின் கடந்த அதிபர் பதவிக் காலத்தில் பாதுகாப்பு, உளவுத்துறையில் காஷ் படேல் முக்கிய பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்
-
நடிகர் ஸ்ரீ குறித்து வதந்திகளை பரப்பாதீங்க; குடும்பத்தினரின் அறிக்கையை பகிர்ந்த லோகேஷ் கனகராஜ்
-
தொடர்ந்து உயரும் தங்கம் விலை; ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை நெருங்கியது!
-
அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள்; கள்ளச் சந்தையில் பயங்கரவாதிகளுக்கு விற்பனை
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை