சீன அதிபர் புத்திசாலி நபர்: அதிபர் டிரம்ப் பாராட்டு

9

பீஜிங்: ஒரு புறம் சீனாவுடன் வரி விதிப்பு யுத்தம் செய்யும் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்யை புத்திசாலி நபர் என பாராட்டி உள்ளார்.


டிரம்ப் பதவி ஏற்ற போதே தங்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு வரி விதிக்கப்படும் என்று எச்சரித்தார். அடுத்தடுத்து சீனாவுக்கு வரி மேல் வரி போட்டார். சீனாவும் பதிலுக்கு வரி போட துவங்கியது. சீனாவுக்கான அமெரிக்காவின் மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது.


இதனால் சீனா, ஏற்கனவே அறிவித்த 34 சதவீதம் வரியுடன் 50 சதவீதத்தை சேர்த்து ஒரே நேரத்தில் 84 சதவீத வரியை அறிவித்தது. தற்போது சீனாவுக்கு கூடுதலாக 21 சதவீதம் வரி போட்டு, மொத்த வரியை 124 சதவீதமாக டிரம்ப் உயர்த்தி விட்டார். ஒரு புறம் சீனாவுடன் வரி விதிப்பு யுத்தம் செய்யும் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங்யை புத்திசாலி நபர் என பாராட்டி உள்ளார்.




இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறியதாவது: சீன அதிபர் ஜின் பிங் புத்திசாலி நபர். என்ன செய்ய வேண்டும் என்பது சீன அதிபர் ஜின் பிங் கிற்கு தெரியும். தன் நாட்டை நேசிப்பவர். விரைவில் அவரிடம் இருந்து எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வரும். போட்டி முடிவுக்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement