ராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளுக்கு சீல்; அமலாக்கத்துறை நடவடிக்கை

ராமேஸ்வரம்: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, ராமேஸ்வரம் சொகுசு ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளை கையகப்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரத்தில் செவன் ஹில்ஸ் என்ற பெயர் கொண்ட சொகுசு ரிசார்ட் அமைந்துள்ளது. டி.எம்.டிரேடர்ஸ் மற்றும் கே.கே.டிரேடர்ஸ் என்ற நிறுவனங்களுடன் தொடர்புடைய இந்த ரிசார்ட் மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி நடப்பதாக அமலாக்கத்துறை கண்டறிந்தது.
இது தொடர்பாக நடத்திய ரெய்டு மூலம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில், ரிசார்ட்டில் இருக்கும் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகள் மற்றும் காலியாக உள்ள நிலத்தை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது.
கையகப்படுத்திய ரிசார்ட் புகைப்படங்களை அமலாக்கத்துறை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையின் கோல்கட்டா மண்டல அலுவலகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.















மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்