கஞ்சா, கத்தி வைத்திருந்த சகோதரர்களுக்கு சிறை
திருவாலங்காடு:திருவள்ளூர் மணவாளன் நகரைச் சேர்ந்தவர்கள் சூர்யா, 18, மற்றும் தினேஷ், 21. சகோதரர்களான இருவரும், கடந்தாண்டு மணவாளன் நகர் பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இவர்கள் மீது மணவாளன் நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், எதிரிகளால் ஆபத்து இருப்பதால் தலைமறைவாக இருந்து வரும் இருவரும், கடந்த சில நாட்களாக திருவாலங்காடில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு திருவாலங்காடு பட்டரை ஏரி அருகே கஞ்சா புகைத்து கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக ரோந்து வந்த போலீசார், திருவாலங்காடு காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர்களிடம் 50 கிராம் கஞ்சா, ஒரு கத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, கத்தியை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
தாம்பரம் பெண்கள் உதவி மையத்தில் காலிபணியிடம்
-
மின்சார பஸ்கள் இயக்க தனியார் வாயிலாக 1,250 நடத்துனர்கள் நியமிக்க முடிவு
-
'பீக் ஹவர்' வேளைகளில் குடிநீர் லாரிகளுக்கு கட்டுப்பாடு காவல் துறை அதிரடி அறிவிப்பு
-
மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை
-
விமான நிலையத்தில் இருந்து விரைவில் மாநகர பஸ்கள் ஓடும்
-
பொது மனைவி மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கணவனும் 'சீரியஸ்'