தமிழக பா.ஜ., புது தலைவருக்்கு ஹிந்து முன்னணி வாழ்த்து

திருப்பூர்: பா.ஜ., புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஹிந்து முன்னணி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:

நயினார் நாகேந்திரன் நீண்ட நெடிய அரசியல் அனுபவமும், மக்களால் நேசிக்கப்படும் நல்ல மனிதராகவும் விளங்குபவர்.

மாநில தலைவராக பொறுப்பேற்பது மிகப் பொருத்தமானது.

அவர் ஏற்றுள்ள தேசிய அரசியல் பணி, மாபெரும் வெற்றி பெற்று, தமிழக அரசியலில் முத்திரை பதிக்க, நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement