கடனை கட்டியும் தடையில்லா சான்று தர மறுப்பு ரூ.1 லட்சம் வழங்க நிதி நிறுவனத்துக்கு உத்தரவு

சேலம்: சேலம், ரெட்டியூர், சிவாய நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 58. இவர், சேலம், மெய்யனுாரில் உள்ள, 'ஆரஞ்ச் ரீடெய்ஸ் பைனான்ஸ் இந்தியா' கிளை நிறுவனத்தில் கடன் பெற்று, 2022 ஜூலையில், 'ஆக்டிவா 6ஜி' மொபட் வாங்கினார். கடனாக பெற்ற, 85,861 ரூபாயை, 25 மாத தவணையில் திருப்பி செலுத்-தினார். பின் நிதி நிறுவனத்துக்கு சென்று தடையில்லா சான்றிதழ் கேட்டபோது, 57,000 ரூபாய் கடன் நிலுவை இருப்பதாக கூறி தர மறுத்தனர்.
ஆன்லைன் மூலம் பணம் செலுத்திய முழு விபர பட்டியலை சமர்ப்பித்தும், நிதி நிறுவனம் ஏற்கவில்லை. இது
குறித்து அழகாபுரம் போலீசில் புகார் அளித்த பாலகிருஷ்ணன், சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், 2024 அக்., 21ல் வழக்கு தொடர்ந்தார். அதில் விசாரணைக்கு பின், கடந்த, 8ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், 'பாதிக்கப்பட்ட நபருக்கு தடையில்லா சான்றித
ழுடன் இழப்பீடாக, 50,000 ரூபாய் தர வேண்டும். தொழில் நடத்தை விதிக்கு முரணாக செயல்பட்டதால், 30,000 ரூபாய் அப-ராதம், மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவுக்கு தனியே, 5,000 ரூபாய் என, 1,05,000 ரூபாயை, 2 மாதங்களுக்குள்
வழங்க வேண்டும். இல்லையெனில், 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement