சூடானில் முகாம்கள் மீது துணை ராணுவம் கொடூர தாக்குதல்: 100 பேர் உயிரிழப்பு

கர்தூம்: சூடானில் உள்ள முகாம்களில், துணை ராணுவப்படையினர் நடத்திய கொடூர தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நிலவி வருகிறது. அந்நாட்டு கைப்பற்றுவதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.1.5 கோடிக்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளுக்கும் இடம்பெயர்ந்துள்ளனர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உள்நாட்டு போர் காரணமாக சூடானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டும் என கணித்து உள்ளனர்.
இந்நிலையில், வடக்கு தர்புர் மற்றும் எல் பஷார் சுற்றி உள்ள பகுதிகளில் மக்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்கள் மீது துணை ராணுவப்படையினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். அதில், கர்ப்பணி பெண்கள், குழந்தைகள், தன்னார்வலர்கள், டாக்டர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் அடக்கம்.
இந்த தாக்குதலில், மருத்துவ பணியாளர்களும் உயிரிழந்துள்ளதால், அப்பகுதியில் எந்த மருத்துவமனையும் செயல்படவில்லை. பலர் படுகாயமடைந்து உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது.


மேலும்
-
மதுரை காஞ்சி பெரியவர் கோயிலில் உதயகுமார் சிறப்பு வழிபாடு
-
தமிழகத்தில் மழைப்பொழிவு எங்கே அதிகம்? இதோ முழு விபரம்
-
இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார்
-
பீகார் சட்டசபை தேர்தல்; காங். கூட்டணியில் இணைகிறார் ராம் விலாஸ் பாஸ்வான் சகோதரர்
-
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு அதிகரிக்கும் மவுசு; பொதுத்தேர்தலில் வாய்ப்பு அளிப்பேன் என்கிறார் பிரதமர் வோங்க்
-
மே.வங்கத்தில் நிலவும் வன்முறை; மக்கள் அமைதி காக்கும்படி மம்தா வேண்டுகோள்