ஆன் லைன் மூலம் மனித எலும்புகள் விற்பனை: அமெரிக்கவில் பெண் கைது

புளோரிடா: ஆன்லைன் மூலம் மனித எலும்புகள், மண்டை ஓடுகள் மற்றும் விலா எலும்புகளை விற்றதாக அமெரிக்காவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் கிம்பர்லீ ஷாப்பர் 52, இவர் மீது மனித உடல்பாகங்களை சட்ட விரோதமாக விற்பனை செய்தல் மற்றும் வாங்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கிம்பர்லீ ஷாப்பர், எலும்புகளை அவர் தெரிந்தே வாங்கி விற்று வந்துள்ளார். அவரது கடை வலைதளத்தைது ஆய்வு செய்ததில், பல்வேறு மனித பாகங்கள் விற்பனைக்கு வைத்து இருப்பது தெரியவந்தது. இதில், இரண்டு மனித மண்டை ஓடுகள், ஒரு விலா எலும்பு, ஒரு முதுகெலும்பு மற்றும் ஒரு பகுதி மண்டை ஓடு ஆகியவை அடங்கும். அவற்றை சேகரித்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். பல ஆண்டுகளாக மனித எலும்புகள் விற்பனை செய்யப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது .


தடயவியல் நிபுணர்களால் எலும்புகளை அடுத்தடுத்து பரிசோதித்ததில் , ஒரு மாதிரி 500 ஆண்டுகளுக்கும் மேலானது என்றும் மற்றவை தொல்பொருள் கண்டுபிடிப்புகள் என்றும் நம்பப்படுகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
கடந்த வியாழன் அன்று கைது செய்யப்பட்ட ஷாப்பர் மறுநாள் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement