விபத்தில் இளநீர் வியாபாரி உள்பட 2 பேர் பலி
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டி அருகே சின்னசீரகாபாடியை சேர்ந்தவர் உத-யகுமார், 39. இளநீர் விற்று வந்தார். நேற்று காலை, 11:40 மணிக்கு, 'டி.வி.எஸ்., 50' மொபட்டில், சின்னசீரகாபாடி அருகே சேலம் - கோவை பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்-போது சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த வேன் மோதி, உதயகுமார் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்தில் பலியானார்.
அதே பகுதியில் நின்றிருந்த, கேரள மாநிலத்தை சேர்ந்த சீபா, 52, என்ற பெண்ணும் படுகாயம் அடைந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார், அப்பெண்ணை மீட்டு சேலம் அரசு மருத்துவம-னைக்கு அனுப்பி விசாரித்தனர். அதில், கோபிசெட்டிப்பாளை-யத்தை சேர்ந்த டிரைவர் சுப்ரமணி, 55, என்பவரை கைது செய்-தனர். அவர், 12 பேருடன், திருவண்ணாமலைக்கு சென்றபோது, வேன் விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்தது.யாசகம் எடுத்தவர்அதேபோல் அயோத்தியாப்பட்டணம் கோதண்டராமர் கோவில் முன், நேற்று காலை, 6:30 மணிக்கு, ஒரு முதியவர், லாரியில் அடிபட்டு இறந்து கிடந்தார். காரிப்பட்டி போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'இறந்த முதியவர், கோவில் முன் யாசகம் எடுப்பவர். அங்குள்ள காலி இடத்தில், லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பர். நேற்று முன்-தினம் இரவு மழை பெய்தபோது, லாரிக்கு அடியில் முதியவர் படுத்துள்ளார். இதை அறியாமல் ஒரு டிரைவர், லாரியை எடுத்துச்-சென்றபோது அதில் சிக்கி இறந்தது தெரியவந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை தேடுகிறோம்' என்றனர்.
மேலும்
-
சூடானில் முகாம்கள் மீது துணை ராணுவம் கொடூர தாக்குதல்: 100 பேர் உயிரிழப்பு
-
ஆன் லைன் மூலம் மனித எலும்புகள் விற்பனை: அமெரிக்கவில் பெண் கைது
-
தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்: தலைவர்கள் வாழ்த்து
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் கலவரம்: 150 பேர் கைது
-
மும்பை அணி சிறப்பான தொடக்கம்; ரன் குவிப்பில் தீவிரம்
-
வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு