பஸ் டிரைவர் மது அருந்தியதை கண்டுபிடிக்க பல்வேறு வசதிகளுடன் புது கருவி வழங்கல்

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள டிரைவர், கண்டக்டர்கள் மது போதையில் இருக்கின்றனரா என, தினமும் பரிசோதனை நடக்கிறது. இதில் சேலம் கோட்டத்தில் உள்ள, 32 கிளை பணி-மனை மற்றும் சேலம், ஆத்துார், மேட்டூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட முக்கிய பஸ் ஸ்டாண்ட் நேர கண்காணிப்பு அலுவல-கத்துக்கு, நவீன வசதிகளுடன் கூடிய, 'பிரீத் அனலைசர்' பரிசோ-தனை கருவிகள், கடந்த, 8ல் வழங்கப்பட்டுள்ளன. இந்த கரு-வியில், பணிமனை, பஸ் ஸ்டாண்ட், வழித்தடங்களில் டிரைவர், கண்டக்டர்கள், 'போதை'யில் உள்ளனரா என ஆய்வு செய்யும் பணி
நடந்து வருகிறது.
இதுகுறித்து போக்கு
வரத்து அலுவலர்கள் கூறியதாவது: சேலம் கோட்டத்தில், 1,900 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில் பணிபுரியும் டிரைவர், கண்-டக்டர்கள், 'போதை'யில் இருக்கின்றனரா என கண்டறிய, 'பிரீத் அனலைசர்' எனும் நவீன கருவி வழங்கப்
பட்டுள்ளது. இந்த கருவியை, யு.எஸ்.பி., கார் உள்ளிட்டவற்றில், 'சார்ஜ்' செய்யலாம்.

முன்பு வழங்கிய கருவியில், ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு மட்டும் காணமுடியும். நவீன கருவியில், சோதனைக்கு உட்படுத்தப்படும் டிரைவர், கண்டக்டர் பெயர், சோதனை இருப்-பிடம் மட்டுமின்றி புகைப்படமும் எடுக்க முடியும். சோதனைக்கு பின் காகித வடிவில் மூச்சுக்காற்று மற்றும் ஆல்கஹால் அளவு விபரங்கள் பெற முடியும். பூஜ்ய அளவு இருந்தால், 'கிரீன்' நிறம் குறிப்பிடும். 30 அளவுக்கு மஞ்சள், 30 முதல், 100 அளவு இருந்தால் 'சிவப்பு' நிறம் இருக்கும். மஞ்சள், சிவப்பு நிறம் இருந்தால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நமது நிருபர்

Advertisement