வடக்கு உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்; 30க்கும் மேற்பட்டோர் பேர் பலி

3

சுமி: வடக்கு கிழக்கு உக்ரைன் நகரான சுமி மீது ரஷ்ய நடத்திய அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும், உக்ரைனில் கணிசமான நிலப்பரப்பை கைப்பற்றி ரஷ்யா தங்கள் வசம் வைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

ரஷ்யா ஏவிய ஏவுகணை ஒன்று, இந்திய மருந்து நிறுவனத்தின் குடோனை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், வடக்கு கிழக்கு உக்ரைன் நகரான சுமி மீது ரஷ்ய நடத்திய அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், பாமர மக்களின் உயிர்களை பறித்து விட்டார் என்றும், அயோக்கியர்களால் மட்டுமே இதுபோன்று செயல்பட முடியும் என்றும் அவர் ஆவேசமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisement