ஷீரடி சாய்பாபா பாதுகை 19, 20ல் தரிசிக்க ஏற்பாடு

சேலம்: ஸ்ரீசாய்பாபா சன்ஸ்தான் ட்ரஸ்ட், ஷீரடி மற்றும் சேலம் ஷீரடி சாய் நண்பர்கள் குழு இணைந்து, ஷீரடி சாய்பாபா பாதுகை தரி-சன நிகழ்ச்சி, சேலம், 3 ரோடு வரலட்சுமி மஹாலில், வரும், 19, 20ல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஷீரடி சாய்-பாபாவின் பாதுகை பல்லக்கு ஊர்வலம், 19 மாலை, 4:00 மணிக்கு, புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, வரலட்சுமி மஹாலில் நிறைவடையும். தொடர்ந்து, 20 காலை, 8:00 மணிக்கு காகட ஆரத்தி நடந்து, விஷ்ணு சகஸ்ர-நாமம், லலிதா சகஸ்ரநாமம், பாராயணம், சாயிநாத ஸ்தவன மஞ்-சரி பாராயணம், ருத்ரம் - வேத பாராயணம் நடக்க உள்ளது. மேலும் சாய் பஜனை, பக்தி இன்னிசை, வீணை கச்சேரி என, இரவு, 9:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கும். அன்று, பாபா பாது-கையை பக்தர்கள் தொட்டு தரிசனம் செய்யும்படி ஏற்பாடு செய்-யப்பட்டுள்ளது. காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்-கப்படும். பக்தர்கள் இரு நாட்களும் வந்து, பாபா ஆசி பெற, சேலம் ஷீரடி சாய் நண்பர் குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்-டுள்ளது.

Advertisement